Saturday,15th of September 2012
சென்னை::தனது அப்பாவின் உடல்நலம் பாதித்திருப்பதால் திருமணத்துக்கு தயாராகிவிட்டதாக பிரியங்கா சோப்ரா கூறினார். இது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதோ அதோ என்று திருமண தேதி பற்றி மழுப்பி வந்த வந்தது பாலிவுட் சைப் அலிகான்,கரீனா கபூர் ஜோடி. ஒருவழியாக வரும் அக்டோபர் 16ம் தேதி இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்திருப்பதாக அவர் களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அதற்கான ஏற்பாடு களை இருவீட்டு குடும்பத் தினரும் தடபுடலாக செய்து வருகின்றனர். இதற்கிடையில் பிரியங்கா சோப்ரா தனது திருமணம் பற்றி திடீர் விருப்பம் தெரிவித்திருக்கிறார். இவரது அப்பா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை சமீபத்தில் அமெரிக்கா அழைத்து சென்ற பிரியங்கா, அங்குள்ள பிரபல மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தார். அறுவை சிகிச்சையும் முடிந்தது. திருமணம் பற்றி பிரியங்கா சோப்ரா கூறும்போது, ‘நான்கு வயது முதலே திருமணம் செய்துகொள்வதற்காக நான் காத்திருக்கிறேன். அது அறியாத வயது. ஆனால் இப்போது அப்பாவின் விருப்பத்துக்காக திருமணத்துக்கு தயாராகவே இருக்கிறேன். எனது அம்மா, அப்பாவும் திருமணம் நடத்தி வைக்க தயாராக இருக்கின்றனர். ஆனால் ஒரேயொரு தடங்கல். இதுவரை எனக்கேற்ற நபரை தேர்வு செய்யவில்லை என்பதுதான். இதுதான் எனது திருமண விஷ யத்தில் இருக்கும் கோளாறு. எனது தோழி கரீனாகபூர் விரைவில் சைபை மணக்க உள்ளார். இது அவர்கள் இருவரது வாழ்விலும் புதிய பயணம். அவர்கள் திருமணத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்என்றார்.

Comments
Post a Comment