Friday,21st of September 2012 சென்னை:::விரைவில் தன் சொந்த பட நிறுவனத்தை அறிவிக்கப் போகிறார் அஜீத் என்பதுதான் கோடம்பாக்கம் முழுக்க பேச்சாக இருக்கிறது. இந்த நிறுவனத்துக்கு குட்வில் புரொடக்ஷன்ஸ் என்று பெயர் வைத்துள்ளதாகவும், அட்டகத்தி படம் இயக்கிய ரஞ்சித் முதல் படத்தை இயக்கப்போகிறார் என்றும் சொல்கிறார்கள். சமீபத்தில் அஜீத்தைச் சந்தித்த ரஞ்சித் குமார், ஒரு கதையைச் சொன்னதாகவும், அது பிடித்துப் போனதால் தானே சொந்தமாக தயாரிக்க அஜீத் முடிவு செய்துவிட்டதாகவும் கூறுகிறார்கள். ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம்! ஆனால் அஜீத் தரப்பில் விசாரிக்கும்போது, பலத்த மவுனமே பதிலாகக் கிடைக்கிறது. அஜீத் இப்போது மூன்று படங்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். அவற்றில் ஒன்று தொடங்கிவிட்டது. அஜீத் படம் தயாரிப்பது குறித்து செய்தி கிளம்புவது இது புதிதல்ல. 2010-லும் இப்படித்தான் படக்கம்பெனி தொடங்கி, படத்துக்கு தலைப்பும் வைத்துவிட்டார்கள். ஆனால் அஜீத்தோ, அப்படியா எனக்கு தெரியாதே என அந்த செய்தியை காலி பண்ணிவிட்டார் என்பது நினைவிருக்கலாம்!!
Comments
Post a Comment