புதுமுகங்களுக்கு பயிற்சி அவசியம்: விக்ரமன் வற்புறுத்தல்!!!

Saturday, 29th of September 2012
சென்னை::-புதுமுகங்களுக்கு நடிப்பு பயிற்சி முக்கியம் என்றார் இயக்குனர் விக்ரமன். ‘புது வசந்தம்’, ‘சூர்ய வம்சம்’, ‘பிரியமான தோழி’, ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’, ‘வானத்தை போல’ உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் விக்ரமன். அடுத்து ‘நினைத்தது யாரோ’ என்ற படத்தை இயக்குகிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: நான் இயக்கும் 17-வது படம் ‘நினைத்தது யாரோ’. இதுதவிர ‘இளமை நாட்கள்’ என்ற படமும் இயக்கி வருகிறேன். இதுவரை எனது படங்களில் காதல், குடும்ப சென்டிமென்ட், காமெடி என காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ‘நினைத்தது யாரோ’ படத்தில் முழுக்க காதல் மட்டுமே பிரதானமாக இடம்பெறுகிறது. அத்துடன் பாட்டு, இசைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. இதில் நடிப்பவர்கள் எல்லோருமே புதுமுகங்கள். இப்படி வரும் புதுமுகங்களுக்கு நடிப்பு பயிற்சி முக்கியம். என் படத்தில் நடிக்கும் எல்லா புதுமுகங்களுக்கும் முதலில் நடிப்பு பயிற்சி அளிக்கிறேன். அதன்பிறகே அவர்கள் ஷூட்டிங்கில் பங்கேற்பார்கள். பிரதாப் ஒளிப்பதிவு. பால்ராஜ் இசை. பி.ரமேஷ், ஜி.இமானுவேல் தயாரிப்பு. அடுத்த மாதம் இதன் ஷூட்டிங் தொடங்கி சென்னை, விசாகப்பட்டினம், பஞ்சாப் போன்ற இடங்களில் நடக்க உள்ளது. இவ்வாறு விக்ரமன் கூறினார்.

Comments