Sunday,23rd of September 2012
சென்னை::ஆர்யாவுடன் காதல் இல்லை என்றார் டாப்ஸி. விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் ஆர்யாவுடன் நடிக்கிறார் டாப்ஸி. இப்பட ஷூட்டிங்கில் இருவரும் நெருங்கி பழகுவதாகவும், டாப்ஸியை ஷூட்டிங்கிற்கு அழைத்துச் செல்வது, மீண்டும் அவர் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு கொண்டுவந்துவிடுவது போன்ற வேலையை ஆர்யா செய்து வருவதாகவும், அடிக்கடி பார்ட்டிகளில் இருவரும் ஜோடியாக பங்கேற்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. இதற்கு தற்போது டாப்ஸி பதில் அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: என்னைப்பற்றிய காதல் கிசுகிசு கதைகள் வருவது வாடிக்கையாகிவிட்டது. அதை கேட்டு கேட்டு சோர்ந்துவிட்டேன். ஆர்யாவுடன் சில நாட்கள்தான் ஷூட்டிங் நடந்தது. அவருடன் அதிகம் பேசக்கூட நேரம் கிடைக்கவில்லை. நான் தனியாக இருக்கிறேன் என்பதை சொல்வதில் மகிழ்ச்சி. இதுதான் என் தரப்பில் நான் தெரிவிக்கும் பதில். நான் நடித்துள்ள 2 படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன. மேலும் 3 படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறேன். வேலையை தவிர வேறு எதையும் யோசிக்கும் அளவுக்கு எனக்கு நேரம் இல்லை. இந்தியில் நடித்துள்ள ‘சஷ்மே பத்தூர் என்ற படம் வரும் பிப்ரவரியில் ரிலீஸ் ஆக உள்ளது.
தற்போது இலியானா நடித்துள்ள ‘பர்பி படம் அவருக்கு நல்ல பேரை பெற்றுத் தந்திருக்கிறது. அதேபோல் பாலிவுட் அறிமுக படத்தில் தனது திறமையை நிரூபித்திருக்கிறார் காஜல் அகர்வால். தமன்னாவும் வெற்றி பெற வாழ்த்துகிறேன். இவர்களுடன் ஒப்பிடும்போது நான் மிகவும் ஜூனியர். பாலிவுட்டில் என்னுடைய அறிமுக படத்திலும் எனது திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவேன். இவ்வாறு டாப்ஸி கூறினார்.
Comments
Post a Comment