Thursday,6th of September 2012
சென்னை::செல்வராகவன் இயக்கும் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் ஆர்யாவும் அனுஷ்காவும் ஜோடியாக நடிக்கின்றனர். இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இப்படம் குறித்து ஆர்யா கூறியதாவது:-
செல்வராகவனின் ‘இரண்டாம் உலகம்’ படத்தில் நடித்ததன் மூலம் என் கனவு நிறைவேறி உள்ளது. செல்வராகவன் கதாநாயகர்களிடம் முன்கூட்டியே கதையை சொல்வது இல்லை என்றும் படப்பிடிப்பில்தான் நடிக்க வேண்டிய சீன்களை சொல்வார் என்றும் தவறான வதந்திகள் பரப்பப்பட்டு உள்ளது.
என்னை சந்தித்த முதல் நாளிலேயே கதையை சொல்லிவிட்டார். கதை மிகவும் பிடித்தது. படத்தை சிறப்பாக எடுத்துள்ளார். ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட் அனைத்தும் இருக்கும். ஜார்ஜியாவின் காடுகளில் படப்பிடிப்பு நடந்தபோது மிகவும் கஷ்டப்பட்டோம்.
ரூம், மின்சாரம், தூங்குவதற்கு கட்டில் எதுவும் இல்லை. அனுஷ்கா ரொம்ப சிரமப்பட்டார். 85 ஆண்கள் மத்தியில் அவர் மட்டுமே பெண். எதுபற்றியும் குறை சொல்லவில்லை. அனுஷ்கா எனக்கு பொருத்தமான ஜோடியாக இருந்தார்.
‘அருந்ததி’க்கு பிறகு சிறந்த கேரக்டர் இப்படத்தில் அவருக்கு அமைந்துள்ளது. இது காதல் கதை என்பதால் எனக்கும் அனுஷ்காவுக்கும் நெருக்கமான காட்சிகள் படத்தில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.

Comments
Post a Comment