
சென்னை::திரிஷாவுக்கும், தெலுங்கு நடிகர் ராணாவுக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாக செய்திகள் பரவின. இருவரும் காதலிப்பதாக ஏற்கனவே கிசு கிசுக்கள் வந்தன.
பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக பங்கேற்றார்கள். திரிஷா ஐதராபாத் செல்லும் போதெல்லாம் ராணாவை சந்தித்தார். இருவரும் விருந்துகளில் கலந்து கொண்டு சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
சமீபத்தில் மும்பை பத்திரிகையொன்றுக்கு கட்டிப்பிடித்தபடி போஸ் கொடுத்தார்கள். இதுபற்றி திரிஷாவிடம் கேட்டபோது இருவரும் நண்பர்களாக பழகுவதாக சொன்னார். எங்களுக்குள் காதல் இல்லை என்றும் மறுத்தார். ஆனால் இரு தினங்களுக்கு முன் திரிஷாவுக்கும், ராணாவுக்கும் ஐதராபாத்தில் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது.
அப்போது திரிஷாவுக்கு ராணா பிளாட்டினம் மோதிரத்தை விரலில் அணிவித்தார் என்றும் நகை பெட்டி ஒன்றையும் திரிஷா கையில் கொடுத்தார் என்றும் கூறினர். இதில் இரு வீட்டு பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.
இதுகுறித்து திரிஷாவிடம் கேட்போது வழக்கபோலவே மறுத்தார். எனக்கும், ராணாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாக சொல்லப்படுவது வதந்தி. ராணா எனக்கு நல்ல நண்பர். அவரை திருமணம் செய்து கொள்ளமாட்டேன்.
Comments
Post a Comment