சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்!!!

Thursday,27th of September 2012
சென்னை:

4. முகமூடி

மிஷ்கினின் சூப்பர் ஹீரோ முகமூடி எதிர்பார்த்த வரவேற்பை பெறாததுடன் கலெக்சனிலும் காலை வா‌ரியிருக்கிறது. நான்கு வாரங்கள் முடிவில் 4.77 கோடிகளை இப்படம் வசூலித்துள்ளது. சென்ற வார இறுதியில் இதன் வசூல் 88 ஆயிரங்கள் மட்டுமே.

3. சாட்டை

சமுத்திரக்கனி நடிப்பில் பிரபுசாலமன் இயக்கியிருக்கும் படம். முதல் மூன்று தினங்களில் இந்தப் படம் 20.8 லட்சங்களை வசூலித்து மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

2. சாருலதா

தாய்லாந்து படத்தின் காப்பியான இது இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சென்ற வாரம் வெளியான இப்படம் முதல் மூன்று தினங்களில் 41,37,420 ரூபாய்களை வசூலித்துள்ளது.

1. சுந்தரபாண்டியன்

இரண்டாவது வாரத்தில் இருக்கும் சுந்தரபாண்டியன் சென்ற வார இறுதியில் 1,22,05,645 கோடியை வார இறுதியில் வசூலித்துள்ளது. இதன் வார நாட்கள் வசூல் 1,48,38,601 கோடி. இதுவரை 3.8 கோடிகளை இப்படம் சென்னையில் மட்டும் வசூலித்து முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

Comments