
சென்னை::விஷ்ணுவர்தன் இயக்க அஜீத் நடிக்கும் படத்தில் டி.வி. நிருபராக நடிக்கிறார் டாப்ஸி.
அப்பா கமல்ஹாசனை சார் என்றுதான் மரியாதையாக அழைப்பார் ஸ்ருதி.
சந்தானத்துடன் ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடித்துவரும் விசாகா, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப்புடன் இணைந்து ‘பெட்லர்ஸ்' என்ற படத்தை தயாரிக்கிறார். இப்படம் வரும் 12ம் தேதி கேன்ஸ் பட விழாவில் திரையிடப்படுகிறது.
‘கோச்சடையான்' படத்திற்கான வசனத்தை மனப்பாடம் செய்துவைத்து டப்பிங் பேசி இருக்கிறார் ஆதி. தூக்கத்தில் இருந்து எழுப்பி கேட்டாலும் தடங்கல் இல்லாமல் ஒப்பிப்பாராம்.
‘ஜவான் ஆப் வெள்ளிமலா' மலையாள படத்தை தயாரித்து நடிக்கும் மம்மூட்டி, சமீபத்தில் 61வது பிறந்த நாளை கொண்டாடினார்.
திரையுலகுக்கு வந்து இந்த ஆண்டுடன் ஏ.ஆர்.ரகுமானுக்கு 20 ஆண்டு நிறைவடைகிறது. இதையொட்டி அவரது சகோதரி ரெஹனா நடத்தும் நிகழ்ச்சியில் பிரபலங்கள் பங்கேற்கின்றனர். தற்போது ‘கோச்சடையான்’, ‘ஐ’, ‘கடல்’ ஆகிய படங்களுக்கு இசை அமைக்கிறார் ரகுமான்.
ரஜினியின் தில்லு முல்லு ரீமேக்கில் ஷிவா நடிக்கிறார். ஓல்டு தில்லுமுல்லுவில் நாகேஷ் நடித்த வேடத்தில் பவர் ஸ்டார் சீனிவாசன் நடிக்கிறார்.
ராதாமோகனின் ‘கவுரவம்’ பட ஹீரோயின் யம்மி கவுதம் மும்பையில் வசித்தபோது தன்னை யாரோ எந்நேரமும் கவனிப்பதுபோல் உணர்ந்தாராம். உடனடியாக வீட்டை காலி செய்துவிட்டாராம். இதை மையமாக வைத்து டோலிவுட் இயக்குனர் ரவி பாபு ஸ்கிரிப்ட் தயாரிக்கிறார்.
பிருத்விராஜ் நடிக்கும் ‘அய்யா’ இந்தி படத்தில் தென்னிந்தியர்கள்பற்றி விமர்சிக்கும் காட்சிகள் இருப்பதாக இணைய தளத்தில் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சாய்பாபா வேடத்தில் நடித்த நாகார்ஜுனா தனது சம்பளத்தை மனைவி அமலா நடத்தும் விலங்குகள் நல சங்கத்துக்கு நன்கொடையாக அளித்தார்.
பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங், அனுஷ்கா சர்மா நடித்த இந்தி படம் தமிழில் ரீமேக் ஆகிறது. விஷ்ணுவர்தன் உதவியாளர் கோகுல் இயக்கும் இப்படத்தில் நான் ஈ ஹீரோ நானி, பரினிதி சோப்ரா நடிக்க பேச்சு நடக்கிறது.
விஷ்ணு, சுனேனா நடிக்கும் நீர் பறவை படத்தின் ஷூட்டிங் கடற்கரை பகுதிகளில் நடக்கிறது. இப்பகுதியில் எழும் அலைகளின் ஒலி, பறவைகளின் சத்தம் போன்றவற்றை ஒலிப்பதிவாளர் இக்பாலுடன் சென்று இயற்கையாக பதிவு செய்தார் இயக்குனர் சீனு ராமசாமி.
கண்ணா லட்டு தின்ன ஆசையாÕ படத்தில் காதல் டூயட் உள்பட 2 பாடல்களை சொந்த குரலில் பாடுகிறார் சந்தானம்.
ரம்யா கிருஷ்ணனின் பிறந்தநாளையொட்டி அவரது தோழிகள் அட்வான்ஸ் கிப்ட்டாக ஓஎம்ஆர் சாலையில் உள்ள ரெஸ்டாரன்ட்டில் அவருக்கு விருந்தளித்து அசத்தினார்கள்.
பாகன் படத்தில் மிகவும் அழகாக இருப்பதாக தன்னை சக நடிகர்கள் பாராட்டியபோது உச்சிகுளிர்ந்து போனாராம் ஜனனி ஐயர்.
Comments
Post a Comment