Wednesday,26th of September 2012
சென்னை::இங்கிலிஷ் விங்கிலிஷ் என்ற படத்தில் ஸ்ரீதேவி நடித்திருக்கிறார். அதற்கு போட்டியாக நதியா நடிக்கும் படத்துக்கு ‘இங்கிலிஷ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. தமிழ், இந்தி, கன்னட படங்களுக்கு தலைப்பு வைப்பதில் அடிக்கடி பிரச்னை எழுகிறது. வித்யாபாலன் நடித்த ‘தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற டைட்டிலுக்கு போட்டியாக கன்னடத்தில் ஒரு படத்துக்கு அதே டைட்டில் வைக்கப்பட்டது. இது பிரச்னையானது. அதேபோல் விஜய் நடிக்கும் துப்பாக்கி, சிம்பு நடிக்கும் ‘வாலு உள்ளிட்ட பட தலைப்புகளும் பிரச்னையில் இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘இங்கிலிஷ் விங்கிலிஷ் என்ற படம் மூலம் பாலிவுட்டில் ரீ என்ட்ரி ஆகி இருக்கிறார் ஸ்ரீதேவி. இப்படம் தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் நதியா நடிக்கும் மலையாள படமொன்றுக்கு இங்கிலிஷ் என பெயரிடப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. தலைப்பை மாற்றும்படி இங்கிலிஷ் விங்கிலிஷ் படக்குழு, மலையாள பட தயாரிப்பாளரிடம் கூறியுள்ளதாம். இப்படத்தில் நடிப்பது பற்றி நதியா கூறும்போது, ‘மலையாளத்தில் நான் நடிக்கும் படங்களுக்கு டபுள்ஸ், செவன் என்று ஆங்கிலத்தில்தான் டைட்டில்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த வரிசையில் அடுத்து நடிக்கும் படத்துக்கு இங்கிலிஷ் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நடிப்பது சந்தோஷம் என்றார்.
Comments
Post a Comment