
சென்னை::த¢ரிஷா, ஜீவா நடிக்கும் படத்திலிருந்து ஆங்கில நடிகை லிசா ஹேடன் நீக்கப்பட்டுள்ளார். வாமனன் படத்தையடுத்து அஹமத் இயக்கும் படம் என்றென்றும் புன்னகை. ஜீவா, த்ரிஷா ஜோடி. இரண்டாவது ஹீரோயின் வேடத்துக்கு ஆங்கில படங்களில் நடித்த லிசா ஹேடன் தேர்வு செய்யப்பட்டார். இவர் ராஸ்கல்ஸ் இந்தி படத்திலும் நடித்துள்ளார். பட ஷூட்டிங் தொடங்கிய நிலையில் திடீரென லிசா நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக ஆண்ட்ரியா நடிக்கிறார்.
இது பற்றி அஹமத் கூறுகையில், இந்த வேடத்துக்கு லிசா பொருத்தமாக இருப்பார் என்பதால் தேர்வு செய்தோம். கால்ஷீட் பிரச்னை காரணமாக அவரால் நாங்கள் கேட்ட தேதிகளை ஒதுக்க முடியவில்லை. இதனால் ஆண்ட்ரியாவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளோம். இது குறித்து அவரிடம் பேசி வருகிறோம் என்றார். கால்ஷீட் பிரச்னை என இயக்குனர் கூறினாலும் லிசா நீக்கப்பட்டதற்கு இரண்டு காரணங¢களை யூனிட்டை சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். கவர்ச்சி நடிகையான லிசா, படம் வெளியானால் ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பார் என கணிக்கப்படுகிறது. இதனால் த்ரிஷா தரப்பு அப்செட் ஆகி, அவரை நீக்க இயக்குனருக்கு பிரஷர் தந்ததாம். அதே நேரம், லிசா திடீரென தனது சம்பளத்தை உயர்த்தி கேட்டதாகவும் அதனால் இப்பட வாய்ப்பை அவர் இழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
Comments
Post a Comment