Sunday,23rd of September 2012
சென்னை::நடிகை நயன்தாரா மீண்டும் நடிக்க வந்துள்ளார். நாகார்ஜுனா, ஜோடியாக தெலுங்கு படத்திலும் அஜீத் ஜோடியாக தமிழ் படமொன்றிலும் நடிக்கிறார். தெலுங்கு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது.
ஐதராபாத்தில் அரங்குகள் அமைத்து நாகார் ஜுனா, நயன்தாரா நடிக்கும் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். அஜீத்துடன் நடிக்கும் படத்தை விஷ்ணு வர்த்தன் இயக்குகிறார். எற்கனவே பில்லா, ஏகன் படங்களில் அஜீத்தும் நயன் தாராவும் இணைந்து நடித்தனர்.
சமீபத்தில் ஆங்கில பத்திரிகையொன்றுக்க நாகார்ஜுனாவும், நயன் தாராவும் ஜோடியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
Comments
Post a Comment