Friday, September 21, 2012
சென்னை:::பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘பிதாமகன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கஞ்சா கருப்பு. அமீரின் ‘ராம்’ படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து, ‘சுப்பிரமணியபுரம்’, ‘பருத்தி வீரன்’, ‘சண்டக்கோழி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். காமெடியில் கலக்கி வந்த கஞ்சா கருப்பு தற்போது கே.கே.பிலிம் இண்டர்நேஷனல் என்ற பெயரில் பட கம்பெனி தொடங்கி தயாரிப்பில் குதித்துள்ளார். அவர் எடுக்கும் முதல்படத்துக்கு ‘வேல்முருகன் போர்வெல்ஸ்’ என பெயரிடப்பட்டு உள்ளது. கரணை வைத்து ‘மலையன்’ என்ற படத்தை இயக்கிய எம்.பி.கோபி இப்படத்தை இயக்குகிறார். ‘அங்காடி தெரு’ மகேஷ் நாயகனாக நடிக்கிறார். மற்ற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
Comments
Post a Comment