
சென்னை::நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை ரம்பா, மீண்டும் திரைப்படம் தயாரிக்கப் போகிறார். 'திரி ரோசஸ்' என்ற படத்தை தயாரித்து கையை சுட்டுகொண்ட ரம்பா, பிறகு சில படங்களில் நடித்தவர் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.
தற்போது ரம்பா தனது அண்ணன் வாசுவுடன் இணைந்து மீண்டும் படத்தயாரிப்பில் இறங்குகிறார். கிட்டதட்ட 15 வருட சினிமா அனுபத்தோடு பல படங்களை தயாரித்த வாசு, சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் பட தயாரிப்பில் விறுவிறுப்பாக இறங்கி உள்ளார்.
ரம்பா மற்றும் வாசு தயாரிக்கும் இந்த படத்தை சுரேஷ் என்ற புதுமுக இயக்குநர் இயக்குகிறார். இவர் சிரஞ்சீவி, பரிசுரி சகோதரர்கள் மற்றும் சித்திக் ஆகியோரிடம் 40 படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார்.
இப்படத்திற்கு ஹீரோவாக நகுல் ஒப்பந்தபமாகியிருக்கிறார். ஹீரோயின் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் மிக பிரமாண்டமான முறையில் வாசு தயாரிக்கிறார்.
Comments
Post a Comment