Thursday,20th of September 2012
சென்னை::ஆர்யாவுடன் டாப்ஸி நெருங்கி இருப்பதால் அவர்களை பற்றி கோலிவுட்டில் கிசுகிசு பரவி வருகிறது. ‘அ ஆ, ‘மருதமலை படங்களில் நடித்தவர் நிலா. தற்போது கைவசம் படங்கள் இல்லாமல் மும்பை சென்றுவிட்டார். ஆனால் சென்னையில் தங்கி இருந்தபோது நிலாவுக்கும் ஆர்யாவுக்கும் நட்பு ஏற்பட்டது. இதுவே பின் காதலாக மாறியது. இருவரும் பல இடங்களில் ஜோடியாக சுற்றினார். ஆர்யா நடிக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் அடிக்கடி நிலா வ¤சிட் அடித்து வந்தார். திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இந்நிலையில் ‘மதராசபட்டினம் படத்தில் ஆர்யாவும், எமி ஜாக்சனும் ஜோடியாக நடித்தனர். இதில் நடிக்கும்போது எமியுடன் ஆர்யாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. ஷூட்டிங் தவிர்த்து பார்ட்டி போன்றவற்றிற்கு ஜோடி போட்டு சென்றனர். ஷூட்டிங் முடிந்து எமி ஜாக்ஸன் லண்டன் சென்ற பிறகும் இருவரின் நட்பும் தொடர்ந்தது. திடீரென்று சென்னைக்கு விசிட் அடித்த அவரை தனது காரில் அமர்த்திக்கொண்டு நகரத்தை சுற்றிக்காட்டினார் ஆர்யா. இதற்கிடையே இந்தியில் நடித¢தபோது, அப்பட ஹீரோ பிரதீக் பப்பருடன் நெருங்கிப் பழகினார் எமி. இப்போது இருவரும் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் ஆர்யாவும் தனது தோழியை மாற்றி விட்டார். அஜீத் நடிக்க விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் இரண்டாவது ஹீரோவாக ஆர்யா நடிக்கிறார். இதில் 2வது ஹீரோயினாக டாப்ஸி நடிக்கிறார். தற்போது டாப்ஸியுடன் நெருக்கமான நட்பை வளர்த்துக்கொண்டிருக்கிறார் ஆர்யா. ஷூட்டிங்கில் ஜோக் அடித்து அவரை கலகலப்பாக வைத்திருப்பதுடன் ஷூட்டிங் முடிந்த பிறகு தனது காரில் அவரை அவர் தங்கி இருக்கும் ஓட்டலில் சென்று இறக்கிவிடுகிறார். மேலும் ஷூட்டிங் வரும்போது அவரை தனது காரிலேயே படப்பிடிப்பு தளத்துக்கு பத்திரமாக அழைத்து வந்து சேர்க்கிறார். பார்ட்டிகளிலும் இருவரும் ஜோடியாக கலந்துகொள்கின்றனர். இதனால் இருவரும் காதலிப்பதாக கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Comments
Post a Comment