
சென்னை::ஐ பட ஷூட்டிங்கிற்காக விக்ரம், எமி ஜாக்சன் மற்றும் படக்குழுவுடன் சீனா செல்கிறார் இயக்குனர் ஷங்கர். நண்பன் படத்தையடுத்து ஷங்கர் இயக்கி வரும் படம் ஐ. இதில் விக்ரம், எமி ஜாக்சன் ஜோடி. இப்படத்தில் பலவித கெட்அப்புகளில் விக்ரம் தோன்றுகிறார். சுரேஷ்கோபி, ராம்குமார், சந்தானம் உள்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். சமீபகாலமாக சென்னை மற்றும் சுற்றுப்புற இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. அடுத்த கட்ட ஷெட்யூல் சீனாவில் நடக்கிறது. இதற்காக விக்ரம், எமி ஜாக்சன், சந்தானம், ஒளிப்பதிவாளர் ஸ்ரீராம் உள்ளிட்டோருடன் சீனா செல்கிறார் ஷங்கர். அடுத்த மாதம் சீனாவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். படத்தின் 40 சதவீத ஷூட்டிங் சீனாவிலே நடத்த திட்டமிட்டிருப்பதால் ஒரு மாதம் அங்கு காட்சிகளை படமாக்குகிறார் ஷங்கர். பின் சென்னை திரும்பி, மூன்றாவது ஷெட்யூலை தொடங்குகிறார். அடுத்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் சீனா பறக்க திட்டமிட்டுள்ளதாக பட வட்டாரங்கள் கூறுகின்றன.
Comments
Post a Comment