இந்திப் படத்தில் வில்லனாக நடிக்கும் சத்யராஜ்: கோலிவுட் டு பாலிவுட் தீபிகா படுகோனுக்கு அப்பா ஆகிறார் சத்யராஜ்!

சென்னை::ஷாருக்கான் நடிக்கும் படத்தில் தீபிகா படுகோனுக்கு அப்பாவாக நடிக்க உள்ளார் சத்யராஜ். இந்தியில் கோல்மால், அப்படத்தின் 2 பாகங்கள், சிங்ஹம் (தமிழ் சிங்கம்), போல் பச்சன் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரோஹித் ஷெட்டி. தொடர்ந்து ரூ.100 கோடி வசூல் செய்யும் படங்களை இயக்கியதால் டாப் இயக்குனர்கள் வரிசையில் இருக்கிறார். அவர் அடுத்து இயக்கும் இந்தி படம் சென்னை எக்ஸ்பிரஸ். மும்பையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு ரயில் புறப்படுகிறது. இதில் பயணிக்கும் மும்பைவாசி ஷாருக்கானுக்கும் தமிழ் பெண் தீபிகா படுகோனுக்கும் காதல் பிறக்கிறது. ராமேஸ்வரம் சென்றதும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகளை வைத்து காமெடியுடன் படம் நகர்கிறது. படத்தின் 50 சதவீத ஷூட்டிங் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடத்த ரோஹித் ஷெட்டி முடிவு செய்திருக்கிறார். இதனால் படத்தில் பெரும்பாலும் தமிழ் நடிகர்களையே நடிக்க வைக்கவும் அவர் திட்டமிட்டுள்ளார். காமெடித்தனம் நிறைந்த டான் வேடம் படத்தில் இடம்பெறுகிறது. அது தீபிகாவின் அப்பா வேடம். அந்த வேடத்துக்கு எந்த தமிழ் நடிகர் பொருத்தமாக இருப்பார் என தமிழ் திரையுலகில் உள்ள தனது நண்பர்களிடம் ரோஹித் ஷெட்டி கேட்டாராம். பலரும் சத்யராஜின் பெயரை சிபாரிசு செய்துள்ளனர். இது தொடர்பாக படக்குழு சத்யராஜிடம் பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ரோஹித் ஷெட்டி கூறுகையில், தமிழை இந்தி பாணியில் பேசும் வடஇந்திய நடிகர்கள் எனக்கு தேவையில்லை. தமிழ் நடிகர்கள் பலரை இதில் நடிக்க வைக்க விரும்புகிறேன். அவர்கள் யார் என்பதை இப்போதைக்கு கூற முடியாது என்றார்...
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பிறகு ஹீரோவாக ஜொலித்த சத்யராஜை மீண்டும் வில்லனாக்கிப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறது இந்தி திரையுலகம்.
'நண்பன்' படத்தில் வைரஸ் என்ற வில்லத்தனம் வாய்ந்த வேடத்தில் நடித்த சத்யராஜியின் நடிப்பை பார்த்து சொக்கிப் போன இந்தி பட இயக்குநர் ரோகித், தான் இயக்கும் இந்திப் படத்தில் வில்லனாக நடிப்பதற்கு சத்யராஜை அழைத்திருக்கிறார். இதற்கு சத்யராஜும் சம்மதம் தெரிவித்து விட்டாராம்.
இந்த படத்தில் ஹீரோவாக ஷாருக்கான் நடிக்கிறார். 'சென்னை எக்ஸ்பிரஸ்' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் ஹீரோயின் தீபிகா படுகோனேவின் அப்பாவாக நடிக்கும் சத்யராஜ் பெரிய டானாக வருகிறாராம்.
Comments
Post a Comment