ராதா மகள் துளசி நடிக்க மணிரத்னம் கண்டிஷன்

Saturday, 29th of September 2012
சென்னை::வேறு இயக்குனர் படத்தில் ராதா மகள் துளசி நடிக்க கண்டிஷன் போட்டார் மணிரத்னம். மணிரத்னம் இயக்கும் படம் ‘கடல்’. இதில் கார்த்திக் மகன் கவுதம், ராதாவின் 2வது மகள் துளசி ஜோடியாக அறிமுகமாகின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது. இந்நிலையில் கவுதம், துளசி இருவரின் போட்டோக்கள் வெளிவராமல் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறார் மணிரத்னம். படம் ரிலீஸ் ஆகும் வரை இருவரும் பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க கூடாது என்றும் இருவருக்கும் நிபந்தனை விதித்திருக்கிறார். இதற்கிடையில் துளசிக்கு புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதனை ஏற்காமல் மவுனம் காத்தார் துளசி. பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் புதிய படமொன்றை இயக்குகிறார். மணிரத்னம், ராதாவுக்கு நெருங்கிய நண்பரான இவர் தனது படத்தில் துளசியை நடிக்க வைக்க எண்ணினார். இதுபற்றி ராதாவிடம் கூறியபோது மணிரத்னத்திடம் பேசும்படி தெரிவித்தார். மணிரத்னத்திடம் துளசியை தனது படத்தில் நடிக்க அனுமதிக்க வேண்டும் என்று ரவி கே. சந்திரன் கேட்டார். அதை அவரால் மறுக்க முடியவில்லை. ஓ.கே. சொன்னார். ஆனால் தனது படம் ரிலீஸ் ஆகும்வரை துளசியின் போட்டோவை பப்ளிசிட்டிக்கு பயன்படுத்தக்கூடாது என்று மணிரத்னம் நிபந்தனை விதித்திருக்கிறாராம். அதனை ரவி கே.சந்திரன் ஏற்றுக்கொண்டதாக தெரிகிறது.

Comments