Thursday,27th of September 2012
சென்னை::விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துக்கொண்டிருக்கும் படத்தின் ஒவ்வொரு மூவ்மெண்டும் திரையுலகிலும், ரசிகர்களிடையேயும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த படத்தை பொருத்த வரையில் அஜித்தின் கடும் பயிற்சியினால் உருவான கட்டுமஸ்தான உடலமைப்பு, ரசிகர்கள் அஜித்தின் காருக்கு பாலாபிஷேகம் செய்தது, இந்தி நடிகர் ராணா நடிப்பது என அனைத்தும் ரசிகர்களுக்கு விருந்து தான்.
அஜித்துடன் ஆர்யா, நயன்தாரா, டாப்ஸி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். படத்தில் பத்திரிக்கை நிருபராக வரும் டாப்ஸி அஜித்குமார், ஆர்யா, ராணா ஆகிய மூவரில் யாருக்கு ஜோடி என்ற கேள்வி எழுந்துள்ளது. படத்தில் நயன்தாரா நடித்தாலும் அஜித்துக்கு தான் ஜோடியா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எதுவாக இருந்தாலும் காலம் வரும் வரை காத்திருந்து தான் ஆக வேண்டும் என இயக்குனர் விஷ்ணுவர்தன் தனது டைரியை மூடியே வைத்துள்ளார். இந்த படத்தில் தான் ஹீரோயின் பிரச்சனை என்றால் அஜித் அடுத்ததாக இயக்குனர் ’சிறுத்தை’ சிவா இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படத்திலும் யார் ஹீரோயின் என்ற பிரச்சனை. அஜித் படத்தில் அனுஷ்காவை நடிக்க வைக்க முடிவெடுத்து அவருடன் பேசியிருக்கிறார்களாம்.
இரண்டாம் உலகம் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதால், வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் பிரியாணி படத்திற்கு மொத்த கால்ஷீட்டையும் கொடுத்துவிடலாம் என்ற முடிவிலிருந்த அனுஷ்கா அஜித் படத்திற்கும் பாதி கொடுத்துவிடலாம் என இருக்கிறாராம்.
விஜய் சூர்யாவுடன் நடித்துவிட்ட அனுஷ்கா அஜித்துடனும் நடித்துவிட்டால் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்த நடிகை என்ற பெயர் வரும் என்று பிளான் பண்ணியிருக்கிறாராம்.
Comments
Post a Comment