நயன்தாரா , ஸ்ரேயா : சூர்யாவுடன் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடுவது யார்??!!!

Saturday,15th of September 2012
சென்னை::சூர்யாவுடன் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆட நயன்தாரா அல்லது ஸ்ரேயாவை ஒப்பந்தம் செய்ய ஹரி முடிவு செய்துள்ளார். சூர்யா நடித்த ‘சிங்கம் வெற்றி பெற்றதையடுத்து இதன் 2ம் பாகம் இயக்குகிறார் ஹரி. இதில் சூர்யா ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா நடிக்க உள்ளனர். இம்மாத இறுதி யில் தூத்துக்குடி துறைமுகத்தில் ஷூட்டிங் தொடங்குகிறது. இதற்காக இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் குத்துபாடல் அமைத்திருக்கிறார்.
இந்த பாடலுக்கு முன்னணி நடிகை ஒருவரை சூர்யாவுடன் ஆட வைக்க ஹரி திட்டமிட்டுள்ளார். இந்த பாடலுக்கு நயன்தாரா அல்லது ஸ்ரேயா இருவரில் ஒருவரை ஆட வைக்க முடிவு செய்யப்பட்டது. நயன்தாரா ஏற்கனவே ‘ஆதவன் படத்தில் சூர்யாவுடன் நடித்திருக்கிறார். ஸ்ரேயா இதுவரை அவருடன் ஜோடி சேர்ந்ததில்லை. தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் நயன்தாராவும், தமிழ், கன்னட படத்தில் ஸ்ரேயாவும் பிஸியாக நடித்து வருகின்றனர். இருவரில் யார் இந்த பாடலுக்கு ஆடுவது என்பதில் குழப்பம் நிலவுகிறது. குறிப்பிட்ட தேதியில் அவர்களது கால்ஷீட் கிடைக்காவிட்டால் ரிச்சா கங்கோபாத்யாவை ஒப்பந்தம் செய்ய இயக்குனர் எண்ணி உள்ளார். இதுபற்றி ஹரி கூறும்போது, ‘குத்துபாடலுக்கு ஆட வைக்க முன்னணி நடிகைகள் பெயர்கள் ஆலோசிக்கப்படுகிறது. அவர்களின் கால்ஷீட் பொறுத்து முடிவு செய்யப்படும். மும்பை நடிகைகளின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளது என்றார்.

Comments