கட் எதுவும் வாங்காமல் 'யு' சான்றிதழ் பெற்ற 'தாண்டவம்'!!!

Friday,21st of September 2012
சென்னை:::யுடிவி தயாரிப்பில் விக்ரம் நடிப்பில் விஜய் இயக்கும் தாண்டவம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்திற்கு தணிக்கை குழு எந்தவித கட்டும் கொடுக்காமல் 'யு' சான்றிதழ் கொடுத்துள்ளது. விக்ரம் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'தாண்டவம்' படத்தின் 75சதவீத படம் லண்டனில் நடப்பதுபோன்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் விக்ரமுக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் எமி ஜாக்சன் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரபல தெலுங்கு நடிகர் கஜபதி பாபு முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாத ஒரு ஆக்ஷம் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தைப் பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு எந்தவித கட்டும் கொடுக்காமல் 'யு'சான்றிதழ் கொடுத்து "ஒரு சிறப்பான பொழுதுபோக்கு அம்சம் நிறைந்த படமாக தாண்டவம் உள்ளது." என்றும் பாராட்டியிருக்கிறார்கள். வரும் செப்டம் 28ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 1000 திரையரங்குகளில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிகளில் 'தாண்டவம்' வெளியாகிறது

Comments