Friday,7th of September 2012
சென்னை::கிளாமராக நடிக்க மறுக்கிறேனா என்பதற்கு ரம்யா நம்பீசன் பதில் அளித்தார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் ‘பிட்சா’. விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் ஜோடி. இப்பட குழுவினர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ரம்யா நம்பீசன் கூறியதாவது: பிட்சா என்பது இத்தாலி நாட்டு உணவு வகை. நகரங்களில் இந்த உணவு பேமஸ். இதையே படத்திற்கு தலைப்பாக வைத்திருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இதுவொரு த்ரில் நிறைந்த கதை. எனது வேடம் என்ன என்பதை வெளியில் சொல்ல இயக்குனர் தடை விதித்திருக்கிறார். ‘கவர்ச்சியாக நடிக்க மறுப்பதால்தான் அதிக படங்களில் நடிக்கவில்லையா?’ என்கிறார்கள். ‘குள்ளநரிக் கூட்டம்’ உள்ளிட்ட நான் நடித்த படங்கள் எல்லாவற்றிலும் எனக்கு கவர்ச்சியான வேடங்கள் எதுவும் அமையவில்லை. வேடத்துக்கு ஏற்பவே நடித்திருந்தேன். சில படங்களில் சம்பந்தமே இல்லாமல் கவர்ச்சி காட்சிகளில் நடிக்க கேட்டதால் அதனை ஏற்கவில்லை. ‘பிட்சா’ படத்தை பொறுத்தவரை காதலர்களுக்கு இடையேயான காட்சிகளில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய அவசியம் இருந்தது. அதை ஏற்று நடித்திருக்கிறேன். மழைக்கு நடுவே நடக்கும் காதல் சரச காட்சிகளை டிரெய்லரில் பார்த்துவிட்டு இவ்வளவு நெருக்கமாக நடித்திருக்கிறீர்களே என்றனர். இந்த காட்சிகள் கதைக்கு மிகவும் அவசியம் என்பதால் அப்படி நடித்தேன். அடுத்து ‘இரண்டாவது படம்’ என்ற படத்தில் நடிக்கிறேன். இவ்வாறு ரம்யா நம்பீசன் கூறினார்.

Comments
Post a Comment