சித்தார்த்துடன் காதலா? பிரியா ஆனந்த் கோபம்!!!

Thursday,13th of September 2012
சென்னை::சித்தார்த்துடன் டேட்டிங் செய்வதாக கூறுவதற்கு பிரியா ஆனந்த் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். ‘பாய்ஸ், ‘நூற்றெண்பது, ‘காதலில் சொதப்புவது எப்படி? உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் சித்தார்த். இவரும் ஸ்ருதி ஹாசனும் கடந்த சில ஆண்டுகளாக ஒன்றாக வசித்ததாகவும் கூறப்பட்டு வந்தது. இது பற்றி பரபரப்பாக திரையுலகில் பேசப்பட்டதுடன் அவ்வப்போது மீடியாக்களிலும் தகவல்கள் வெளிவந்தன. இது பற்றி சித்தார்த்திடம் நேரில் கேட்டபோது கோபமாக பதில் அளித்தார். பின்னர் ஸ்ருதி ஹாசன் அவரிடமிருந்து விலகிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது வாமனன், நூற்றெண்பது படங்களில் நடித்த பிரியா ஆனந்துடன் சித்தார்த் டேட்டிங் செய்வதாக கூறப்படுகிறது. ‘நூற்றெண்பதுÕ படத்தில் சித்தார்த்துடன் பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்தபோது அவர்களுக்குள் நட்பு உருவானது. இதையடுத்து இருவரும் டேட்டிங் செய்வதாக திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ‘எங்கேயும் எப்போதும்Õ படத்தில் நடித்த சர்வானந்த் ஜோடியாக ‘கோ அன்ட்டே கோட்டிÕ என்ற டோலிவுட் படத்தில் பிரியா ஆனந்த் நடித்து வருகிறார். ஐதராபாத்தில் ஷூட்டிங்கில் இருந்த அவரிடம், ‘சித்தார்த்துடன் டேட்டிங் செய்கிறீர்களாமே? என்று கேட்டபோது கோபம் அடைந்தார். ‘சித்தார்த்தை நேரில் பார்த்து 4 மாதத்துக்கு மேல் ஆகிறது. அவருடன் நட்பு மட்டுமே இருக்கிறது. இருவரும் டேட்டிங் செய்கிறோம் என்பதில் உண்மை இல்லை என்றார்.

Comments