Wednesday,12th of September 2012
சென்னை::பிரபுதேவாவுடன் பிரிவுக்கு பிறகு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. அவர் கூறியதாவது: இந்த அளவுக்கு உயர்வதற்கு கடின உழைப்பு தந்திருக்கிறேன். அதிர்ஷ்டமும் என்பக்கம் இருந்ததை மறுக்க முடியாது. ஒவ்வொரு நாள் எழும்போதும் இன்றைக்கு ஏதாவது கற்க வேண்டும் என்று எண்ணுவேன். எல்லாவற்றிலும் சிறந்தவளாக இருந்துவிட்டேன் என்று கூற முடியாவிட்டாலும் அதிலும் பாடங்கள் கற்றேன். திரைத்துறையில் எனக்கிருக்கும் நண்பர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் என்னுடனே இருக்கிறார்கள். இத்துறையில் போட்டியாளர்களை ஒரேயடியாக கடந்து சென்றுவிட முடியாது. ஆனால் எதுவாக இருந்தாலும் கடின உழைப்பு மட்டுமே வெல்லும். எதிர்பார்க்கும் நடிப்பை தராவிட்டால் யாரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். யாரையும் சந்தோஷப்படுத்துவதற்காகவோ, ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பதற்காகவோ எனது வழியை மீறி சென்றதில்லை. என்னை பற்றி மீடியாக்களில் வரும் செய்திகள் பற்றி கேட்கிறார்கள். என்னை பற்றி வரும் செய்திகளை ரசித்து படிப்பேன். கிசு கிசுவோ, கட்டுகதைகளோ என்னை பாதித்ததில்லை. இதற்கு காரணம் அவைகளை தாங்கிகொள்வதற்கான வேலிக்கு அப்பால் நான் நிற்க பழகி இருக்கிறேன். ஆனாலும் பத்திரிகைகளில் எழுதுவதற்கு முன் அதற்கான பொறுப்பை உணர்ந்து எழுத வேண்டும். நடிகையாக இருந்தாலும் நானும் உணர்வுள்ள ஒரு மனுஷிதான். வெளியில் எங்கேயாவது செல்லும்போது தவறான கிசுகிசுக்களை மனதில் வைத்துக்கொண்டு சிலர் கிண்டலாக பேசும்போது மனம் வலிக்கிறது.

Comments
Post a Comment