வீட்டில் எனக்கு பெண் பார்க்கிறார்கள்: பரத்!!!

Saturday,22nd of September 2012
சென்னை::பரத் ‘திருத்தணி‘, ‘555‘ ஆகிய படங்களில் நடிக்கிறார். ‘555‘ படத்தை சசி இயக்குகிறார். இப்படத்துக்காக கடும் உடற்பயிற்சிகள் செய்து உடம்பை ‘சிக்ஸ்பேக்’குக்கு மாற்றி உள்ளார்.

‘திருத்தணி’ படத்தை பேரரசு இயக்குகிறார். இதன் படவேலைகள் முடிந்து விரைவில் ரிலீசாக உள்ளது. இதற்கிடையில் பரத் காதலில் விழுந்துள்ளதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் கிசுகிசுக்கள் பரவி உள்ளன.


அவர் காதலிப்பவர் நடிகை சஞ்சனா என்றும் கூறப்பட்டது. இவர் கன்னடத்தில் பிரபல நடிகையாக உள்ளார். இருவரும் தனியாக சந்தித்து காதல் வளர்ப்பதாக செய்திகள் பரவின. இதனை பரத் மறுத்துள்ளார். தனக்கு வீட்டில் பெண் பார்ப்பதாகவும் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து பரத் கூறியிருப்பதாவது:-


நான் நிறைய பெண்களுடன் பழகுகிறேன். யாருடனும் நெருக்கமான தொடர்பு இல்லை. நடிகை சஞ்சனாவுடன் என்னை இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. அதில் உண்மை இல்லை. அத்துடன் சீனியர் நடிகை ஒருவருடனும் என்னை இணைத்து பேசுகிறார்கள். இது அபத்தமானது.


எனக்கு வீட்டில் பெண் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். அடுத்த வருடம் நிச்சயம் திருமணம் செய்து கொள்வேன். சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் நடிக்க வந்தேன். இந்த துறையில் கஷ்டப்பட்டு போராடிக்கொண்டு இருக்கிறேன்.

இவ்வாறு பரத் கூறினார்.

Comments