Thursday,13th of September 2012
சென்னை::நகைச்சுவை நடிகர் சந்தானம், தயாரித்து ஹீரோவாக நடித்து வரும் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடிகர் சிம்பு ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார்.
நடிகர் சந்தானமும், இராம.நாராயணனும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக விசாகா நடிக்கிறார். இவர்களுடன் பவர் ஸ்டார் டாக்டர்.ஸ்ரீனிவாசன் மற்றும் பலர் நடிக்கிறார்கள். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இப்படத்தை மணிகண்டன் இயக்குகிறார். தமன் இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார்.
சந்தானமும், பவர் ஸ்டாரும் இணைந்து நடிப்பதால் இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் படத்திற்கு இன்னும் வலு சேர்க்கும் விதத்தில், இப்படத்தில் இடம் பெறும் ஒரு பாடலில் நடிகர் சிம்புவை நடனம் ஆடை வைக்க வேண்டும் என்று முடிவு செய்த சந்தானம், இதற்காக சிம்புவை அனுகியிருக்கிறார்.
சிம்புவும், சந்தானமும் நெருங்கிய நண்பர்கள் என்பதால், சிம்புவும் இதற்கு சம்மதம் தெரிவித்து, ஒரு பாடலுக்கு நடனமும் ஆடியிருக்கிறார். சிம்பு நடனம் ஆடிய இந்த பாடல் சென்னை அருகே உள்ள பின்னி மில்லில் சமீபத்தில் படமாக்கப்பட்டது.

Comments
Post a Comment