ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சென்னையில் பாராட்டு விழா!!!

Monday,10th of September 2012
சென்னை::இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரையுலகில் இசையமைக்க ஆரம்பித்து 20 ஆண்டுகள் ஆவதை தொடர்ந்து, அவருக்கு பிரமாண்ட பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற இருக்கும் இந்த பாராட்டு விழா வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கிறது.

மணிரத்னம் இயக்கிய 'ரோஜா' திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான், இசைத் துறையில் பல சாதனைகளை புரிந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என்று பல இந்திய மொழி திரைப்படங்களுக்கும், ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்திருக்கும் ரஹ்மான், பல தேசிய விருதுகளையும், ஆஸ்கார் விருதையும் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்.

திரைத் துறையில் ரஹ்மானின் இசைப் பயணம் 20ஆம் ஆண்டை எட்டிவிட்டதை தொடர்ந்து, இதை கொண்டாடும் விதத்திலும், அவரை கெளரவப் படுத்தும் விதத்திலும் பிரமாண்ட விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, காமராஜர் அரங்கில் வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற இருக்கும் இந்த பாராட்டு விழா 'ரைன்ட்ராப்ஸ்' (RAINDROPSS) என்ற இசைக்குழு சார்பில் நடத்தப்படுகிறது.

ரஹ்மானை கெளரவிக்கும் விதமாக பிரபல இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் என திரைத் துறையைச் சார்ந்த பல பிரபலங்கள் இந்த பாராட்டு விழாவில் கலந்துகொள்கிறார்கள்.

Comments