Wednesday,26th of September 2012
சென்னை::கார்த்தி நடிக்கும் பிரியாணி பட வேலைகள் துவங்கியுள்ளன. வெங்கட் பிரபு இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நடிக்க ரிச்சாவை பரிசீலித்தனர். தற்போது அவரை மாற்றிவிட்டு அனுஷ்காவை தேர்வு செய்துள்ளனர்.
அவருக்கு இப்படத்தில் நடிக்க ரூ.65 லட்சம் சம்பளம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனுஷ்கா கைவசம் தற்போது தாண்டவம், இரண்டாம் உலகம், அலெக்ஸ் பாண்டியன், சிங்கம் 2 ஆகிய படங்கள் உள்ளன. அஜீத் ஜோடியாகவும் புதுப்படமொன்றில் நடிக்கிறார்.
தாண்டவம், இரண்டாம் உலகம் படங்கள் முடிந்துவிட்டன. வருகிற 28-ந்தேதி தாண்டவம் ரிலீசாகிறது. இரண்டாம் உலகம் படம் அடுத்த மாதம் வருகிறது. தமிழில் முன்னணி நடிகையாக வளர்ந்துள்ளார். இதுவரை 50 லட்சம் வாங்கிய சம்பளத்தையும் உயர்த்திவிட்டார். தெலுங்கு படங்களில் இருந்தும் அனுஷ்காவுக்கு வாய்ப்புகள் குவிகின்றன.
தமிழில் பிசியாக இருப்பதால் தெலுங்கில் நடிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார்.
Comments
Post a Comment