செப்.6 போடா போடி ட்ரெய்லர்!!!

Wednesday,5th,of,September 2012
சென்னை::போடா போடி, வேட்டை மன்னன், வாலு. மூன்று படங்கள் இருக்கின்றன. இதில் கடைசியாகத் தொடங்கிய வாலு தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்கள். அதற்குள் போடா போடியை வெளியிட பரபரக்கிறது தயா‌ரிப்பு தரப்பு.

பல வருடங்களாக அண்டர் புரொடக்சன் லேபிளில் இருக்கும் இந்தப் படம் நடனத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. பழைய ராஜேந்தர் படம் போல கிளைமாக்ஸே டான்ஸ்தானாம். சிம்பு, வரலட்சுமி, ஷோபனா என்று ஆடி தீ‌ர்த்திருக்கிறார்கள். தயா‌ரிப்பாளருக்கு இதுதான் அடுத்த சிம்பு படம் என்று தெ‌ரியப்படுத்த ஆவலோ ஆவல்.

இந்த மாதம் 6ஆம் தேதி படத்தின் ட்ரெய்லரை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ட்ரெய்லர் வெளியிடுவது ஒருவகை நிச்சயதார்த்தம். இதோ பாரு... நான்தான் முதல்ல வருவேன் என்று சொல்லாமல் சொல்வது. இதே நாளில் ஒரு பாடலையும் வெளியிட்டால் என்ன என்று யோசித்து வருகிறார்கள்.

Comments