மனைவிக்கு ரூ.40 கோடி: நடிகர் பவன்கல்யாண் விவாகரத்து?!!!

Wednesday,5th,of,September 2012
ஐதராபாத்::பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் இவர் சிரஞ்சீவியின் தம்பி ஆவார். பவன் கல்யாண் மனைவியை விவாகரத்து செய்ய முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரது மனைவி பெயர் ரேணு தேசாய். இவரும், நடிகையாக இருந்தவர்.

இருவரும் காதலித்து திருணம் செய்து கொண்டனர். சமீப காலமாக கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அடிக்கடி தகராறில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பிரிந்து போய் தனித்தனியாக வசிக்கிறார்கள். மனைவியை விவாகரத்து செய்ய பவன் கல்யாண் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. சிரஞ்சீவி மகன் ராம்சரண் திருமணத்தில் ரேணு பங்கேற்க வில்லை. விரைவில் விவாகரத்து செய்து பிரிய முடிவு செய்துள்ளார்கள்.

ரேணு தேசாய்க்கு ரூ.40 கோடி ரூபாய் கொடுத்து செட்டில் மென்ட் செய்து விவாகரத்துக்கு பவன் கல்யாண் சம்மதம் பெற்றதாக கூறப்படுகிறது.

Comments