Tuesday,18th of September 2012
சென்னை::பொம்மை நாய்கள்’ படம் பற்றி இயக்குனர் பாபா விக்ரம் கூறியதாவது: வில்லனை ஹீரோ பழிவாங்கும் வழக்கமான கதையாக இல்லாமல் குழந்தைகளும் ரசிக்கும் வகையில் கதை அமைக்க எண்ணியதன் விளைவுதான் இக்கதை. மூன்று பொம்மை நாய்கள் ஆக்ஷன் ஹீரோக்கள் ரேஞ்சுக்கு இதில் நடிக்கின்றன. பகல் முழுவதும் பொம்மைகளாக அலமாரியில் இருக்கும் இந்த நாய்கள் இரவில் நிஜ உருவில் தோன்றி எதிரிகளை பழிவாங்குகின்றன. அதற்கான காரணம் என்ன என்பதை சஸ்பென்சாக விளக்குகிறது படம். இப்படத்துக்காக கடை வீதி அரங்கில் குறவன் குறத்தியாக வேடம் அணிந்து கருணாஸ், கோவை சரளா ஆடிப்பாடிய பாடல் காட்சி படமானது. இக்காட்சியில் 30 நிஜ குறவன், குறத்தி ஜோடியும் ஆடி இருக்கின்றனர். ‘பட்டுச்சேலை வாங்கித்தாரேன்..’ என்ற இப்பாடலை புஷ்பவனம் குப்பு சாமியுடன் இணைந்து சொர்ணலதா பாடினார். இது இவர் பாடிய கடைசி பாடல் ஆகும். இப்படத்தில் ராதாரவி, நாசர், வடிவுக்கரசி, பாண்டு, பாபிலோனோ உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். எஸ்.வி. உதயகுமார் ஒளிப்பதிவு. இவ்வாறு பாபா விக்ரம் கூறினார்.

Comments
Post a Comment