Saturday, 29th of September 2012
சென்னை::நடிகர் சந்தானம் முன்னணி காமெடியராக உயர்ந்துள்ளார். பெரிய ஹீரோக்கள் போட்டி போட்டு இவரை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்கின்றனர்.
வடிவேலு ஒதுங்கியதால் அவர் இடத்தை வலுவாக பிடித்துள்ளார். தற்போது 'சிங்கம்-2', 'அமளிதுமளி', 'பூலோகம்', 'ஐ', 'வாலு', 'சேட்டை', 'மதகஜராஜா', 'என்றென்றும் புன்னகை' உள்பட 12 படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.
எந்த நடிகரும் இவ்வளவு படங்களில் நடிக்கவில்லை. மார்க்கெட் உயர்ந்ததால் சம்பளத்தையும் ஏற்றி உள்ளார். ஒருநாள் சம்பளமாக ரூ10 லட்சம் வேண்டும். குறைந்தது ஒரு படத்தில் 20 நாட்கள் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று புது நிபந்தனை விதித்துள்ளாராம்.
இதன் மூலம் ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் நிர்ணயித்துள்ளார். 5 நாட்கள், 3 நாட்கள் நடித்து தரும்படி சில இயக்குனர்கள் அவரிடம் கால்ஷீட் கேட்கின்றனர். அவற்றில் நடிக்க மறுக்கிறாராம்.
20 நாட்கள் வேண்டுமானால் நடிக்கிறேன். அதற்கு குறைவான நாட்களில் நடிக்க முடியாது என்கிறாராம். 20 நாட்களுக்கும் ஒருநாள் சம்பளம் ரூ.10 லட்சம் என்ற வகையில் ரூ.2 கோடி எங்களால் எப்படி தரமுடியும். சிறுபட்ஜெட் படங்களுக்கு அவ்வளவு தொகை தருவதற்கு சாத்தியம் இல்லை என்று தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சந்தானம் மேல் புகார் சொல்கிறார்கள். அதைப்பற்றி சந்தானம் கவலைப்படவில்லை. மார்க்கெட் இருப்பதால் சம்பளத்தை உயர்த்தி உள்ளார்.
Comments
Post a Comment