Monday,17th of September 2012
சென்னை::இந்த ஆண்டு தமிழில் கடந்த ஆகஸ்டு மாதம் வரை 'முகமூடி'யை சேர்த்து 100 படங்கள் வரை வந்தன. தொடர்ந்து இம்மாதம் 'மன்னாரு', 'சுந்தரபாண்டியன்', 'பாகன்', படங்கள் வந்துள்ளன. இதில் உதயநிதி ஸ்டாலின் நடித்த 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படம் 150 நாட்களை தாண்டி ஓடி பெரும் தொகை லாபம் ஈட்டியுள்ளது.
தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் வந்த 'நான் ஈ' படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 15 கோடிக்கு மேல் வசூல் பார்த்துள்ளது. தெலுங்கில் ரூ.75 கோடி ஈட்டியுள்ளது. இந்த படம் ரூ. 40 கோடி செலவில் எடுக்கப்பட்டது. வசூல் ரூ.100 கோடியை தாண்டும் என்கின்றனர்.
லிங்குசாமி இயக்கத்தில் வந்த 'வேட்டை' படமும் லாபம் சம்பாதித்தது. இதில் ஆர்யா, மாதவன், அமலாபால், சமீரா ரெட்டி இணைந்து நடித்து இருந்தனர், இந்த படத்தை இந்தியிலும் ரீமேக் செய்திருந்தார்கள்.
விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த 'நண்பன்' படமும் வசூல் பார்த்தது. ஷங்கர் இயக்கியிருந்தார். ரூ. 1 கோடி செலவில் எடுத்த 'மெரீனா' படம் ரூ. 3 கோடி லாபம் சம்பாதித்தது. 'அம்புலி 3டி' படமும் ரூ. 4 கோடி வசூல் ஈட்டியது. இதனை ரூ. 2 கோடி செலவில் எடுத்து இருந்தனர்.
'கலகலப்பு', 'காதலில் சொதப்புவது எப்படி', 'அட்டகத்தி' படங்கள் நன்றாக ஓடின. 'வழக்கு எண் 18/9', 'கழுகு', 'உருமி', 'நான்' படங்களும் பேசப்பட்டன. 'பில்லா 2', 'தோனி', '3', 'சகுனி', 'முகமூடி' படங்கள் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டன. ஆனால் இவற்றில் சில படங்கள் வசூலில் திருப்தி அளிக்கவில்லை என்கின்றனர். பல படங்கள் நஷ்டத்தை சந்தித்து உள்ளன.

Comments
Post a Comment