Wednesday,26th of September 2012
சென்னை::நடிகர் ஆர்யா குடும்பத்தினருடன் அண்ணா நகரில் வசிக்கிறார். தற்போது அந்த வீடு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன் கொள்ளையர்கள் அந்த வீட்டுக்குள் புகுந்துள்ளனர். அப்போது ஆர்யா அங்கு இல்லை படப்பிடிப்புக்காக வெளியூர் சென்று இருந்தார்.
கொள்ளையர்கள் வீட்டு பீரோவை உடைத்து ரொக்கப்பணத்தை அள்ளியுள்ளனர். நகைகளையும் எடுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்கள். இது பற்றி தகவல் அறிந்ததும் ஆர்யா அதிர்ச்சியானர். நடித்து சம்பாதித்து சேர்த்து வைத்த பணம் போய் விட்டதே என்று வருந்தினார். ஆனால் போலீசில் புகார் செய்யவில்லை. இதனால் கொள்ளை விஷயம் வெளியில் தெரியாமல் இருந்தது. இப்போது தான் அது மெதுவாக திரையுலகினர் மத்தியில் கசிய ஆரம்பித்துள்ளது.
தனியார் துப்பறியும் நிறுவனம் மூலம் கொள்ளை பற்றி ஆர்யா ரகசியமாக விசாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளதும், போலீசில் புகார் அளிக்கலாமா, வேண்டாமா என்று அவர் குழப்பத்தில் இருப்பதாகவும் அறியப்படுகிறது.
ஆனால் ஆர்யாவுக்கு நெருக்கமான நண்பர் ஒருவர் இதனை மறுத்தார். ஆர்யா வீட்டில் கொள்ளை நடந்ததாக வெளியான செய்திகள் உண்மையானவை அல்ல. வதந்தி தான் என்றார். ஆனால் ஆர்யா இந்த கொள்ளை சம்பவம் பற்றி வெளியான செய்தி குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை.
Comments
Post a Comment