Friday,31st of August 2012
சென்னை::நெருக்கமான காட்சிகளில் தயங்காமல் நடிப்பேன் என்றார் பார்வதி ஓமனகுட்டன். அஜீத்துடன் ‘பில்லா 2’ படத்தில் அறிமுகமானவர் பார்வதி ஓமனகுட்டன். அவர் கூறியதாவது: உலக அழகிபோட்டியில் கலந்துகொண்டேன். ஆனால் வெற்றி பெறவில்லை. இது எனக்கு வருத்தம்தான். ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு சக்தி இருக்கிறது. அதுதான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறது. பின்னர் இந்திய அழகி போட்டியில் வெற்றி பெற்றேன். இதன்பிறகு நடிப்பை தேர்வு செய்தேன். இதற்கு முன்னரும் அழகிபோட்டியில் வென்றவர்கள் நடிகையாகி இருக்கிறார்கள். சிலர் வெற்றி பெற்றனர். சிலர் பெறவில்லை. இன்னும் சிலர் மாடல் அழகிகளாக தங்கள் தொழிலை தேர்வு செய்துள்ளனர். புதுமுகமாக நடிக்க வந்ததால் எனக்கு ஆலோசனை கூறவோ, அறிவுரை கூறவோ யாரும் இல்லை. இதனால் வெற்றியை ருசிக்கவில்லை. ஆனால், இந்நிலை பெரிய நடிகைகளுக்குக்கூட ஏற்பட்டிருக்கிறது. எல்லோரும் தவறு செய்கிறார்கள். அதிலிருந்து பாடம் கற்க வேண்டும். இதனால்தான் தேர்வு செய்தே படங்களை ஒப்புக்கொள்கிறேன். ‘நெருக்கமான காட்சிகளில் கவர்ச்சியாக நடிப்பீர்களா?’ என்கிறார்கள். கவர்ச்சிக்கும் ஆபாசத்துக்கும் மெல்லிய கோடுதான் வித்தியாசம். ஹாலிவுட் படங்களில் நெருக்கமான காட்சிகள் நிறைய வருகின்றன. கவித்துவமாக படமாக்கப்படுவதால் அதை ரசிகர்கள் ஏற்கிறார்கள். ஒரு கதைக்கு நெருக்கமான காட்சி இருந்தால்தான் அதை நகர்த்த முடியும் என்ற நிலை இருந்தால் அக்காட்சிகள் இடம்பெறலாம். அதை வெட்டி எறியக்கூடாது. அப்படி செய்தால் அது நியாயமாக இருக்காது. அதுபோல் எனக்கொரு நிலை ஏற்பட்டால் தயங்காமல் நடிப்பேன். இவ்வாறு பார்வதி ஓமனகுட்டன் கூறினார்.

Comments
Post a Comment