தமிழில் மொழிமாற்றம் செய்யப்படும் தாய்லாந்த் நாட்டு படம்!!!

Thursday,2nd of August 2012
சென்னை::ஃபஸேன்' (The Passion) என்ற தலைப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற தாய்லாந்த் நாட்டுப் படம், தமிழில் 'தொடாம விடமாட்டேன்' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.

திடுக்கிடும் திருப்பங்களுடன் திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் கதைப் படி, ஒரு மிகப் பெரிய வணிக வளாகத்தின் உரிமையாளரும், நிர்வாகியுமானவர் அங்கு வரும் அழகிய இளம் பெண்களை எப்படியாவது அடைந்து, அவர்களை மறைமுகமாக வைக்கப்பட்டிருக்கும் கேமராக்களில் படம் பிடித்து, தவறான பல வழிகளில் அந்த பெண்களைப் பயன்படுத்த நினைக்கின்றான். இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட ஒரு பெண் அவர்களின் சுயரூபத்தை வெளி உலகிற்கு தெரியப்படுத்தி, அவர்களிடம் பணம் பறிக்கலாம் என்று நினைக்கிறாள். அதற்காக தனது காதலனையும் தன்னுடன் சேர்த்துகொண்டு அந்த வணிக வளாகத்திற்கு செல்கிறாள்.

இந்த முயற்சியில் ஈடுபடும்போது, அந்த இளம் பெண் வணிக வளாகத்திற்குள் சிக்கிக் கொள்கிறாள். அவளின் உள் நோக்கத்தைப் பற்றி தெரிந்துகொண்ட, வணிக வளாகத்தின் உரிமையாளர் வளாகத்தின் அனைத்து கதவுகளையும் பூட்டி விடுகிறார். உள்ளே சிக்கி கொண்ட அந்தப் பெண்ணின் நிலை என்ன? அங்கிருந்து அவள் தப்பித்தாளா? அவளுடைய நோக்கம் நிறைவேரியதா? என்பதுதான் படம்.

திடுக்கிடும் காட்சிகளுடன் பல திருப்பங்கள் நிறைந்த இப்படத்தை ரசிகர்கள் நாற்காலியின் நுனியில் அமர்ந்து பார்க்கும் அளவுக்கு ஒரு திகில் படமாக உருவாக்கியிருக்கிறார்களாம். அடுத்தது என்ன நடக்கும் என்று படம் பார்ப்போர் யூகிக்க முடியாத அளவுக்கு பல திருப்பங்களுடன் காட்சிகள் மிகவும் சுவாரசயத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறதாம்.

கவர்ச்சி, ஆக்ஷன், மர்மம் என்று முழுக்க முழுக்க ஒரு பொதுழுபோக்கான படமாக உருவாகியிருக்கும் 'தொடாம விடமாட்டேன்' படம் வரும் செப்டம்பர் மாதத்தில் தமிழகம் முழுவதும் வெளியாகிறது.

Comments