

சென்னை::பொதுவாக படத்தில் கௌரவ வேடத்தில் நடிகர்கள் நடித்தாலும் அதற்கு ஏற்ப சம்பளம் வாங்குவது வழக்கம். தமிழ் படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமலஹாசன் ஆகியோர், சில படங்களில் சம்பளம் வாங்காமல் கௌரவ வேடத்தில் நடிக்கின்றனர். அந்த நல்ல பழக்கத்தை இந்த தலைமுறை நடிகர்களும் பின்னபற்ற தொடங்கியுள்ளனர். அது ஆரோக்கியமான தமிழ் சினிமாவிற்கு ஒரு தொடக்கம் என்று தான் சொல்ல வேண்டும். நடிகை ஸ்ரீதேவி நீண்ட வருடங்களுக்கு பிறகு நடிக்கும் படம் 'இங்கீலிஷங் விங்கீலிஷ்'. இந்த படத்தில் தல 'அஜீத்' கௌரவ வேடத்தில் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்து வருகிறது. இந்நிலையில் கௌரவ வேடத்தில் நடிக்க சம்பளம் தேவையில்லை என்று தல 'அஜீத்' சொல்லிவிட்டாராம், அதுமட்டுமின்றி ஷூட்டி போது தனக்கு ஆகும் அனைத்து செலவுகளையும் அஜீத்தே பார்த்துக் கொள்கிறாராம். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அட்லீஷ்ட் 'பிளைட் டிக்கெட்' நாங்கள் வாங்கி தருகிறோம் என்று கூறியதற்கு தல 'அஜீத்' வேண்டாம் என்று கூறிவிட்டாராம். அஜீத் இந்த நல்ல மனசை போனி கபூர், தயாரிப்பாளர் பால்கி நடிகை ஸ்ரீதேவி உட்பட அனைவரும் பாராட்டியுள்ளனர்.
Comments
Post a Comment