தமிழ் படங்களுக்கு நோ கால்ஷீட் : அசின்!!!

Thursday,23rd of August 2012
சென்னை::தமிழ் படங்களில் இப்போதைக்கு நடிக்கவில்லை. பாலிவுட் படங்களில்தான் முழு கவனம் செலுத்துகிறேன் என்றார் அசின். இது பற்றி அவர் கூறியதாவது: பாலிவுட்டுக்கு சென்ற பிறகு கமர்ஷியல் அம்சம் கொண்ட படங்களில் நடித்து வருகிறேன். ரூ.100 கோடி வசூல் சாதனை செய்த படங்களின் பட்டியலில், நான் நடித்த படங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதில் மகிழ்ச்சி. இதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இதுவரை நடித்த படங்களில் பெரிய வேடங்களில் நடித்துவிட்டேன் என்று கூற முடியாவிட்டாலும் என்னுடன் நடித்த நடிகர்கள் பெரிய ஹீரோக்கள். அப்படங்களில் என்னை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்பை அளித்ததுடன் வெற்றிக்கும் உறுதுணையாக இருந்தார்கள். இப்படி சொல்வது எனது கூடுதலான நம்பிக்கையா என்கிறார்கள். இல்லை. சிறுவயதிலேயே நான் நடிக்க தொடங்கிவிட்டேன். அப்போதிருந்தே எனக்கு நல்ல எதிர்காலம் தெரிந்தது. இதுவரை நடித்த படங்களில் எனக்கு திருப்தி இருக்கிறது. சோதனையான கதாபாத்திரங்களில நடிக்க எனக்கும் இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. பல மொழிகளில் ஒரே நேரத்தில் நடிக்கும் ரிஸ்க் இப்போதைக்கு எடுக்க விரும்பவில்லை. தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய படங்களில்தான் நான் அறிமுகமானேன். ஆனால் இப்போதைக்கு இந்தி படங்களில் நடிக்க மட்டுமே முழுகவனம் செலுத்துகிறேன். மற்ற மொழிகளுக¢கு கால்ஷீட் தர நேரமில்லை. தென்னிந்திய படங்கள் என்பது என் வீடு போன்றது. எனக்கு எப்போது தேவையோ அந்த நேரத்தில் நான் அங்கு செல்ல முடியும். இவ்வாறு அசின் கூறினார்.

Comments