
சென்னை::மிருகம்’ படப்பிடிப்பில் இயக்குனர் சாமி கன்னத்தில் அறைந்ததாக பரபரப்பு புகார் கூறியவர் பத்மபிரியா. தற்போது மலையாள பட உலகிலும் மானேஜருக்கு சம்பளம் கேட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
இந்நிலையில் பத்மபிரியா அளித்த பேட்டி வருமாறு:-
நான் நிறைய தமிழ் படங்களில் நடித்துள்ளேன். ஆனால் தற்போது தமிழில் நீண்ட இடைவெளி விழுந்துள்ளது. தமிழில் எனக்கு படங்கள் இலலை. இயக்குனர்கள் யாரும் என்னை அணுகவில்லை. ஏன் ஒதுக்குகிறார்கள் என்ற காரணமும் தெரியவில்லை.
என்னைப் பொறுத்தவரை தமிழ் படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். நல்ல கதைகள் அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். ஏற்கனவே ‘இரும்புக்கோட்டை முரட்டுச்சிங்கம்’ படத்தில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளேன்.
மலையாள படங்கள் எனக்கு புகழை பெற்று தந்துள்ளன. என் மானேஜரை மலையாள பட உலகில் சர்ச்சையாக்கி உள்ளனர். எனக்கு மட்டும் அவர் மானேஜர் இல்லை. வேறு நடிகர்களிடம் அவர் பணியாற்றுகிறார்.
இந்த பிரச்சினை தற்போது சந்தேகத்தில் இருப்பதால் மேற்கொண்டு பேச விரும்பவில்லை. இயக்குனர் சாமி அடித்த விவகாரம் மற்றும் மானேஜர் பிரச்சினைகளால் என்னை சர்ச்சைக்குரியவராக பார்ப்பது சரியல்ல. நான் 45 படங்களில் நடித்துள்ளேன். இதற்கு காரணம் ரசிகர்கள்தான். நிறைய இயக்குனர்களிடம் பணியாற்றி இருக்கிறேன். அவர்களுக்கெல்லாம் என்னை பற்றி தெரியும். யாரிடமும் பிரச்சினை வைத்துக் கொண்டது இல்லை.
இவ்வாறு பத்மபிரியா கூறினார்.
Comments
Post a Comment