
சென்னை::ஐஸ்வர்யா ராய் கர்ப்பிணியானதும் சினிமாவை விட்டு விலகினார். குழந்தை ஆரோக்கியமாக பிறப்பதற்காக டாக்டர்கள் ஆலோசனைபடி உணவு சாப்பிட்டு வந்தார்.
குழந்தை ஆரத்யா பிறந்த பின் சில மாதங்கள் வெளியில் தலைகாட்டாமல் வீட்டிலேயே குழந்தை பராமரிப்பில் தீவிர கவனம் செலுத்தினார். விரும்பிய உணவுகளை சாப்பிட்டார். உடற்பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால் எடை கூடியது.
சமீபத்தில் விளம்பர படம் ஒன்றில் நடிப்பதற்காக குழந்தையுடன் கேரளா சென்றார். அப்போது குண்டாக காட்சி அளித்தார். முகத்திலும், உடம்பிலும் நிறைய சதை போட்டு இருந்தது. மீண்டும் பழைய அழகுக்கு ஐஸ்வர்யாராய் வரவேண்டும் என்று ரசிகர்கள் இணைய தளங்களில் விருப்பம் தெரிவித்தனர்.
இதையடுத்து தீவிர உடற்பயிற்சியில் இறங்கியுள்ளார். 10 கிலோ வரை எடை குறைத்து ஒல்லியாகும் முடிவில் இருக்கிறாராம்.
Comments
Post a Comment