Tuesday,28th of August 2012
சென்னை::தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் இணையதம் www.tantis.org என்ற பெயரில் இன்று வெளியிடப்பட்டது. இந்தியாவிலேயே திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்காக தொடங்கப்பட்ட முதல் இணையதளம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இணையதளம் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் உறுப்பினர்களின் பயன்பாட்டுக்கு மட்டும் இன்றி தமிழ் சினிமா ரசிகர்களும் பயன் பெறும் வகையில் இணையப் பத்திரிகையாகவும் உருவாக்கப்பட்டுள்ளது.
1931 முதல் 2012ஆம் ஆண்டு வரையிலான தமிழ் சினிமா தகவல், திரைப்படங்களின் தணிக்கை திரைக்கதை, தமிழ் சினிமா நிகழ்ச்சிகள், செய்திகள் ஆகியவற்றுடன் தினசரி 12 மணி நேரம் ஒளிபரப்பாகக் கூடிய இயக்குநர்கள் தொலைக்காட்சி (Directors TV) என்ற வெப் டிவி ஒன்றும் உள்ளது.
இந்த டைரக்டர்ஸ் டிவியில் இயக்குநர்கள், சங்க உறுப்பினர்களின் குறும்படம் மற்றும் ஆவணப் படங்களை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளார்கள். இத்துடன் சினிமாத்துறை நிகழ்வுகளான படத்துவக்க விழா, இசை வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்பவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த இணையதள துவக்க நிகழ்ச்சியை முன்னிட்டு இன்று சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்ற 'சாட்டை' படத்தின் இசை வெளியீட்டு விழா, டைரக்டர்ஸ் வெப் டிவியில் காலை 9.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதுமட்டும் இன்றி இசை, நடனம், நடிப்பு, ஒளிப்பதிவு என திரைப்படத்தின் அனைத்து துறைகளிலும் உள்ள இளம் திறமையாளர்கள் தங்களைப் பற்றிய விபரங்களை இந்த இணைய தளத்தில் பதிவு செய்யலாம். இதன் மூலம் இயக்குநர்கள் இந்த திறமையாளர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு தங்கள் படங்களில் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பாக அமையும்.
மேலும் விபரங்களுக்கு www.tantis.org என்ற இணையத்தள முகவரியை சொடுக்கவும்.

Comments
Post a Comment