
சென்னை::'துப்பாக்கி' முடித்தவுடன் 'யோஹன்' படத்தில்தான் விஜய் நடிப்பார் என்று இயக்குனர் கவுதம் மேனன் கூறி வந்தார்.
அந்த நேரம் பார்த்து... யோஹன் படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஏஎல் விஜய்யின் படத்தில்தான் விஜய் நடிக்க ஆர்வமாக உள்ளதாகக் கூறப்பட்டது. இதனை விஜய்யோ, கவுதம் மேனனோ மறுக்கவில்லை அப்போது.
இந்த நிலையில், முதல் முறையாக இந்த செய்தி உண்மைதான் என ஒப்புக் கொண்டுள்ளார் கவுதம்மேனன்.
தனது அடுத்த படத்தில் விஜய் நடிக்கவில்லை என்று தனது டிவிட்டர் மூலம் அவர் அறிவித்துவிட்டார்.
அவரது ட்விட்டரில், " நீதானே என் பொன்வசந்தம் படத்தின் 8 பாடல்கள் செப்டம்பர் 1ம் தேதி வெளியாகும். இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற இருக்கிறது.
யோஹன் படம் குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். விஜய்யுடன் யோஹன் படம் தொடங்கவில்லை.
விஜய்யின் அடுத்த படத்தினை இயக்குவது இயக்குனர் விஜய்தான். 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தினை முடித்துவிட்டு எனது அடுத்த படத்தினை முடிவு செய்வேன்" என்று தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment