ஏழு ஹீரோக்கள் இணைந்து நடிக்கும் 'கூத்து!!!

Saturday,25th of August 2012
சென்னை::வளரும் ஹீரோக்களாக இருந்தாலும் சோலோவாக ஒரு படத்தில் ஹீரோவாக நடிப்பதையே அதிகம் விரும்பும் தமிழ் சினிமா நாயகர்கள் அவ்வப்போது சில படங்களில் சேர்ந்தும் நடிக்கிறார்கள். அந்த வரிசையில் ஏழு ஹீரோக்கள் சேர்ந்து நடித்திருக்கும் படம் தான் 'கூத்து'.

'அம்முவாகிய நான்' படத்தை இயக்கிய பத்மாமகன் இயக்கும் இப்படத்தில் விமல், பிரசன்னா, ரிச்சர்ட், ஹரிஷ், பரணி, நிதிஷ், ஜெனிமி பாலாஜி ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். நாயகிகளாக அருந்ததி மற்றும் நந்தகி நடித்திருக்கிறார்கள்.

அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் நடக்கும் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் தமிழ் சினிமாவின் வழக்கமான பார்மூலாக்களை தவிர்த்தி புதிய கோணத்தில் படமாகி வருகிறது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக வனப்பகுதியின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் தினமும் 160 கி.மீ தூரம் பயணம் செய்து இப்படத்தின் காட்சிகளை படமாக்கி வருகிறார்களாம்.

ரெஹான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை யுகபாரதி எழுதுகிறார். தினேஷ் ஸ்ரீ ஒளிப்பதிவு செய்ய, சி.எஸ்.பிரேம் படத்தொகுப்பு செய்கிறார். தியாகராஜன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். 26699 சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.மாலதி தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி பத்மாமகன் இயக்குகிறார்.

கேரள வனப்பகுதிகளில் இறுக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது.

Comments