Wednesday,22nd of August 2012
சென்னை::நயன்தாராவும், ஆர்யாவும் காதலிப்பதாக ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவின. பிரபுதேவாவுடனான உறவை முறித்துக் கொண்டதும் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.
ஏற்கனவே ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போதே நட்பு மலர்ந்தது. அதன் பிறகு ‘ஸ்ரீராமராஜ்ஜியம்’ தெலுங்கு படத்தில் நடிக்க நயன்தாரா ஐதராபாத் போனார். அப்போதும் இருவரும் நட்பு ரீதியான தொடர்பில் இருந்தனர்.
பிரபுதேவாவை உதறி விட்டு சென்னை திரும்பிய நயன்தாராவை முதல் ஆளாக வரவேற்றவர் ஆர்யா. தனது வீட்டிற்கு அழைத்து ‘கேக்’ வெட்ட வைத்து விருந்தே கொடுத்தார். அத்துடன் மீண்டும் நடிக்கும்படி அவர்தான் அறிவுறுத்தினார் என்றும் கூறப்படுகிறது. புதுப்படங்களில் நயன்தாராவுக்கு வாய்ப்பு பிடித்து கொடுக்கிறார் என்றும் கூறுகின்றனர்.
இவற்றுக்கெல்லாம் ஆர்யா தற்போது பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
நயன்தாரா திறமையான நடிகை. ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் ஒன்றாக நடித்தோம். அப்போது அவரின் நடிப்புத் திறமையை நேரிலேயே கண்டேன். எங்களைப் பற்றி தவறான வதந்திகள் பரப்பப்படுகின்றன. நயன்தாரா எனக்கு தோழியாக மட்டுமே இருக்கிறார். வேறு எந்த உறவும் இல்லை.
‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் நடித்தபோது நட்பானோம். அந்த நட்பு இன்னும் தொடர்கிறது. சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களை மட்டுமே பேசுகிறோம். புதுப்படங்களில் நடிக்க நயன்தாராவுக்கு நான் சிபாரிசு செய்வதாகவும் வதந்தி பரப்பியுள்ளனர். அப்படி எதுவும் இல்லை.
கதாநாயகிகளை தேர்வு செய்வது இயக்குனர்கள்தான். கதைக்கு யார் பொருத்தம் என்று கருதுகிறார்களோ அந்த நடிகையை தேர்வு செய்கின்றனர். அவர்களை யாரும் நிர்ப்பந்தம் செய்ய முடியாது. எனது படங்களிலும் குறிப்பிட்ட நடிகைதான் வேண்டும் என்று நான் நிர்ப்பந்தம் செய்வது இல்லை.
இவ்வாறு ஆர்யா கூறினார்.

Comments
Post a Comment