
சென்னை::ரசிகர்களுக்கு டிமிக்கி கொடுத்து ஐஸ்வர்யா ராய் எஸ்கேப் ஆனதால் பரபரப்பு ஏற்பட்டது. ஐஸ்வர்யாராய் விளம்பர படமொன்றில் நடிப்பதற்காக நேற்று கொச்சி வந்தார். அவர் வருவதுபற்றி தகவல் பரவியதால் விமான நிலையத்தில் ரசிகர்கள் கூட்டம் மொய்த்தது. கேமராவும் கையுமாக ஆவலாக மணிக்கணக்கில் காத்திருந்தனர். பயணிகள், விமான நிலைய ஊழியர்கள், கார் பார்க்கிங்கில் இருந்த டிரைவர்களும் ஐஸ்வர்யாவை காண காத்திருந்தனர். போலீசார் சிலரும் ஐஸ்வர்யாவுடன் எப்படியாவது புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் ரசிகர்களோட ரசிகர்களாக கலந்திருந்தனர்.
கைக்குழந்தையுடன் ஐஸ்வர்யா வருவதாக தகவல் வந்திருந்ததால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக அவரை அழைத்துச் செல்லும் எண்ணத்தில் போலீசார் பரபரப்பாக காணப்பட்டனர். ஆடம்பர கார் ஒன்றை விமான நிலைய போர்டிகோவில் நிறுத்தி வைத்தனர். அந்த காரில் ஏறுவதற்கு ஐஸ்வர்யா ராய் வருவார் என்ற எண்ணத்தில் அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவர் வந்ததும் வேறு பாதை வழியாக மற்றொரு காரில் போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்றுவிட்டனர்.
இதையறிந்த ரசிகர்கள் அவரைப் பார்ப்பதற்கு ஓடினர். இதை கவனித்து ஐஸ்வர்யா ராய் ஒரு சில நொடிகள் காரை நிறுத்தி ரசிகர்களை பார்த்து கை அசைத்தார். ஆனால் யாரும் புகைப்படம் எடுக்க முடியாததால் ஏமாற்றம் அடைந்தனர். இதுபற்றி ஐஸ்வர்யா கூறும்போது,‘இருவர் பட ஷூட்டிங்கிற்காக கேரளா வந்தேன். இரண்டாவது முறையாக இப்போது மீண்டும் வந்திருக்கிறேன். ஆனால் என் குழந்தையுடன் இங்கு வருவது இதுதான் முதல் முறை’ என்றார்.
Comments
Post a Comment