துப்பாக்கிக்கு தடை நீட்டிப்பு!!!

Thursday,23rd of August 2012
சென்னை::துப்பாக்கி’ படப் பெயரை மாற்ற வேண்டும் என்று ‘கள்ளத் துப்பாக்கி’ படத் தயாரிப்பாளர் கே.சி.ரவிதேவன் சென்னை 2வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை நீக்கக்கோரி கலைப்புலி தாணுவும், பிலிம் சேம்பர் சார்பிலும் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வந்தது. நேற்றும் இம்மனு மீதான விசாரணை வந்தது. வழக்கை வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுவரை தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Comments