ஜாக்கெட் அணியாத காட்சியால் கணவருடன் மோதலா? ரீமா சென் பேட்டி!!!

Sunday,26th of August 2012
சென்னை::இந்தி படத்தில் ஜாக்கெட் அணியாமல் நடித்த காட்சியால் கணவருடன் மோதல் ஏற்பட்டதா என்பதற்கு ரீமா சென் பதில் அளித்தார். இது பற்றி அவர் கூறியதாவது: திருமணத்துக்கு பிறகுதான் எனக்கு சினிமாவில் நல்ல நேரம் வந்திருக்கிறது. நிறைய படங்களில் நடிக்கிறேன். கேங்ஸ் ஆப் வசேப்பூர் படம் ரிலீஸ் ஆனது. கேன்ஸ் பட விழாவில் பங்கேற்றேன். தோழன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறேன். கேங்ஸ் ஆப் வசேப்பூர் படத்தில் ஜாக்கெட் அணியாமல் முழுமையாக முதுகை காட்டி நடித்ததால் என் கணவர் ஷிவ் கரணுக்கும் எனக்கும் பிரச்னை ஏற்பட்டதுபோல் வதந்தி கிளப்புகிறார்கள். இது நல்ல ஜோக். நான் ஒரு நடிகை. என் வேலையைத்தான் செய்கிறேன். இதுபோன்ற வதந்திகளுக்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை. அந்த படத்தில் சில காட்சிகள் இடம்பெற்றிருப்பது உண்மைதான். ஜாக்கெட் இல்லாமல் எனது முதுகுபகுதி முழுவதும் பளிச்சிடுவதுபோல் சீன் அமைந்திருந்தது. ஆனால் அது நிர்வாண காட்சி அல்ல. அதுபோல் நடித்ததற்காக நான் வருத்தப்படவில்லை.

தமிழில் எனது முதல்படம் ‘மின்னலேவில் தொடங்கி ஒருபோதும் நான் ஓவர் கிளாமராக நடித்ததில்லை. ஆனால் கிளாமர் நடிகை என்ற இமேஜ் எனக்கு அமைந்துவிட்டது. தலைமுதல் கால்வரை மூடிக்கொண்டு நடித்தாலும் நான் கிளாமராக நடித்திருப்பதாக கூறுகிறார்கள். அதற்காக வருந்தவில்லை. பெருமைப்படுகிறேன். எனவே கிளாமர் ஹீரோயின் என்ற பட்டப்பெயரை தவிர்க்க விருப்பமில்லை. இவ்வாறு ரீமா சென் கூறினார்.

Comments