Tuesday,28th of August 2012சென்னை::நடிகர் பிரசன்னா தனது பிறந்த நாளை மந்தைவெளியில் பார்வையற்றோருடன் இன்று கொண்டாடினார். மனைவி நடிகை சினேகாவுடன் அவர் வந்திருந்தார்.
பார்வையற்றோர் மத்தியில் கேக் வெட்டினார். அவர்களுக்கு சினேகா கேக் ஊட்டி விட்டார். பின்னர் மூன்று சக்கர சைக்கிள், 100 பேருக்கு துணிமணிகள், உபகரணங்கள், 200 பேருக்கு உணவு போன்ற உதவி பொருட்களையும் சினேகாவும், பிரசன்னாவும் வழங்கினர்.
நிகழ்ச்சியில் பிரசன்னா பேசியதாவது:-
எனது பிறந்தநாளை இன்றுதான் பயனுள்ளதாக கொண்டாடி இருக்கிறேன். எனக்கு இந்த நிகழ்ச்சிக்கு வருவது கடைசி நிமிடம் வரை தெரியாது. பிறந்தநாளையொட்டி மயிலாப்பூர் கோவிலில் சினேகாவும், நானும் சாமி கும்பிட்டோம். திடீரென்று இங்கே சினேகா என்னை அழைத்து வந்து விட்டார்.
உங்கள் முன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்காக சினேகாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இனிவரும் காலங்களிலும் இதுபோல பயனுள்ள வகையில், பிறந்த நாள் கொண்டாடுவேன்.
இவ்வாறு பிரசன்னா பேசினார்.
நிகழ்ச்சியில் பார்வையற்றோர்கள் சங்க தலைவர் அருணாச்சலம், ஐயப்பன், சாய் சங்க தலைவர் கே.தங்கராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Comments
Post a Comment