டாப்லெஸ் போஸ் கொடுத்ததில் தப்பில்லை : ஸ்ரேயா திடீர் பல்டி!!!

Friday,31st of August 2012
சென்னை::டாப்லெஸ் போஸ் கொடுத்ததாக வதந்தி பரப்புகிறார்கள் என்று கூறிய ஸ்ரேயா, திடீர் பல்டியடித்துள்ளார். டாப்லெஸ் போஸ் கொடுத்ததில் தப்பில்லை என அவர் கூறியுள்ளார். கடந்த வாரம் இணையதளங்களில் ஆங்கில இதழ் ஒன்றுக்கு ஸ்ரேயா டூ பீஸ் உடை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்த படங்களும், ஜாக்கெட் அணியாமல் டாப்லெஸ் தோற்றத்தில் போஸ் தந்த படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது பற்றி அவரிடம் கேட்டபோது, ‘டாப் லெஸ் போஸ் எதுவும் நான் கொடுக்கவில்லை. யாரோ அதுபோல் வதந்தி பரப்புகிறார்கள். நான் ஒரு நடிகை, மாடல் அழகி கிடையாது. நடிப்பு எனது தொழில். மாடலிங் செய்வது என் தொழில் கிடையாது. டாப்லெஸ் போஸ் பற்றி வரும் வதந்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. என் வாழ்க்கையில் அதுபோன்ற அர்ப்பமான விஷயங்களுக்கு இடமில்லை என்று கோபமாக கூறினார். இந்நிலையில் நேற்று அளித்த பேட்டியில் திடீர் பல்டியடித்தார். ‘டாப்லெஸாக நான் போட்டோவுக்கு போஸ் கொடுத்தது உண்மைதான். அப்படி தோன்றியதற்கு காரணம், வ¤ரசம் இல்லாமல் அது புகைப்படம் சொல்லும் கருத்து எனக்கு பிடித்திருந்தது. சொன்னபடியே அது படமாக்கப்பட்டது. அதில் ஆபாசம் எதுவும் இல்லைÕÕ என்றார். ஸ்ரோயாவின் இந்த விளக்கம் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments