கிளாமருக்கு நந்திதா மறுப்பு!!!

Saturday,25th of August 2012
சென்னை::‘அட்ட கத்தி' படத்தில் அறிமுகமான நந்திதா கூறியதாவது: ‘அட்ட கத்தி'யில் என் நடிப்பை எல்லோரும் பாராட்டினார்கள். முதல் படமே கவனிக்க வைத்ததில் மகிழ்ச்சி. தெற்றுப்பல்தான் எனது அழகு என்கிறார்கள். வெங்கட்பிரபு உதவியாளர் வெங்கடேஷ் இயக்கும் ‘நானும் நந்தினியும்’ என்ற படத்தில் மதுரை பெண்ணாக நடிக்கிறேன். இதில் ஹீரோ என் தெற்றுப்பல் அழகில் மயங்கி காதலிப்பது போன்ற கதை. தென்னிந்திய முகமாக இருப்பதால் அதிக கிளாமராக நடிக்க மாட்டேன். கதைக்குத் தேவையான அளவுக்கு உறுத்தாத வகையில் நடிப்பேன். குடும்பப்பாங்கான கேரக்டர்களுக்கு முக்கியத்துவம் தருவேன்.

Comments