
சென்னை::பிரியாமணி `சாருலதா' என்ற படத்தில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட நான்கு மொழிகளில் இப்படம் தயாராகியுள்ளது. கே.எஸ். ரவிக்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பொன்குமரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இதன் தமிழ் பதிப்பை ஹன்ஸ்ராஜ் சக்சேனா வெளியிடுகிறார். இதற்கான பாடல் சி.டி. வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் நடந்தது. விழாவில் பிரியாமணி பங்கேற்று பேசியதாவது:-
சாருலதா' படத்தில் ஒட்டிப்பிறந்த இரட்டையர் வேடத்தில் நடித்துள்ளேன். இந்த படத்துக்காக நிறைய உழைத்துள்ளோம். நான் கஷ்டப்பட்டு நடித்தேன். இயக்குனர் திறமையானவர். நன்றாக படத்தை கொண்டு வந்துள்ளார். இந்த படத்தில் நிறைய கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வேலைப்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை ஏற்படுத்தி கொடுக்கும். எனக்கு இந்த படம் விருதுகளை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை உள்ளது.
விழாவில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகர், இயக்குனர்கள் பாக்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், திரு பிரசாத், ஷக்தி சிதம்பரம், கண்ணன், தியேட்டர் அதிபர் சங்க தலைவர் பன்னீர்செல்வம், தயாரிப்பாளர் தேனப்பன், நடிகர் நந்தா, நடிகை சரண்யா பொன் வண்ணன், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, கனல் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Comments
Post a Comment